வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணி புரிகின்றனரா?-அதிகாரிகள் ஆய்வு

ஜெயங்கொண்டத்தில் வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணி புரிகின்றனரா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-01-12 18:57 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள், டூவீலர் மெக்கானிக் ஷாப் உள்ளிட்டவைகளில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி ஒருங்கிணைந்த பள்ளிகள் கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா தலைமையில் நடைபெற்றது. வணிக நிறுவனங்கள் மற்றும் மெக்கானிக் ஷாப்புகளில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா? என திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்- சிறுமிகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது. அவர்களை பள்ளிக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். இடை நின்ற பள்ளி மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப அறிவுறுத்த வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பணியில் அமர்த்தினால் சட்டப்படி குற்றம். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது கடும் தண்டனை வழங்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்