டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார்பள்ளிமாணவன் சதுரங்க போட்டியில் சாதனை
டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளிமாணவன் சதுரங்க போட்டியில் சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ச. ரதீஸ் ரூபன். இவர் சிவகாசி சதுரங்க கழகம் 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்திய சதுரங்க போட்டியில் 1001, 1200 தரவரிசை பிரிவில் முதலிடம் பிடித்து ரூ.16 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளார்.
இந்த சாதனை மாணவனை தட்சணமாற நாடார் சங்க தலைவர் சு.மு. காளிதாசன், பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் உமரிசங்கர், சங்க செயலாளர் ராஜகுமார், பொருளாளர் செல்வராஜ், துணை தலைவர் அனிதா சு.சிவானந்தன், துணை செயலாளர் ராமநாதன், பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம், ராமசுப்பு, ஜனகர், ரமேஷ், பிரம்மசக்தி, ராகவன், ஜெய கணேஷ், ஜெயபாலன் ஆகியோர் பாராட்டினர்.