நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பா.ஜ.க.நிர்வாகிகள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டா ஆகியோரை பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கோபியில் உள்ள ஜமியுள் கபீர் அஹ்லே சுன்னத்வல் ஜமாத் பள்ளிவாசல் முன்பு ஏராளமான முஸ்லிம்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி கோபி பஸ்நிலையம் வந்தடைந்தனர்,
அதைத்தொடர்ந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். இதில் பவானி முஹம்மது மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.