தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-20 18:45 GMT

கோவை


நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தி.மு.க.வினர் உண்ணாவிரதம்


தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை சிவானந்தா காலனியில் நேற்று காலையில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதற்கு மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, மேயர் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


பின்னர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-


மாணவர்கள் பாதிப்பு


மத்தியில் ஆட்சி செய்து வரும் பா.ஜனதா அரசு கடந்த 9 ஆண் டுகளாக தமிழக மாணவர்களை சீரழிக்கும் வகையில் நீட் தேர்வை திணித்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது நீட் தேர்வை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்.

ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு சரியான சட்ட வழிமுறைகளை செய்யாமல் நீட் தேர்வை புகுத்த மத்திய அரசுக்கு துணை போனது. இதனால் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


தி.மு.க. தொடர்ந்து போராடும்


தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் தமிழக கவா்னர் அந்த தீர்மானத்தை அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டார். இதன் காரணமாக தமிழகத்தில் இதுவரை 24 பேர் உயிரை மாய்த்து உள்ளனர். எனவே நீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். அதுவரை தி.மு.க. தொடர்ந்து போராடும்.


இவ்வாறு அவர் கூறினார்.


உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. மாநில செய்தி தொடர் பாளர் வக்கீல் தமிழன் பிரசன்னா, வடக்கு மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, பகுதி செயலாளர்கள் காளப்பட்டி பொன்னுசாமி, சரவணம்பட்டி சிவா என்கிற பழனிசாமி, எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் பகுதி செயலாளர் மாணிக்கம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ்குமார், மாநகராட்சி பொது சுகாதார குழு உறுப்பினர் மாரிச்செல்வன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கார்த்திக் செல்வராஜ், சிவா, பூங்கொடி சோமசுந்தரம், பாபு, சித்ராமணியன், சர்க் கார் சாமக்குளம் பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, வெள்ளாணைப் பட்டி ஊராட்சி துணை தலைவர் ராஜன், கோவில் பாளையம் சுரேந்திரன், ஆரோக்கிய ஜான் மற்றும் அறிவரசு, கண்ணதாசன், துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், கோவை லோகு, எஸ்.எம்.சாமி, நாச்சிமுத்து, தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்