தி.மு.க. இளைஞரணி மண்டல ஆலோசனை கூட்டம்

விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மண்டல ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூா் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Update: 2023-08-13 18:52 GMT


விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மண்டல ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூா் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

விருதுநகரில் தனியார் திருமண அரங்கில் தி.மு.க. இளைஞரணி மண்டல ஆலோசனை கூட்டம் மாநில துணை அமைப்பாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தென்காசி, சிவகாசி மாநகரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- தி.மு.க.வில் பல்வேறு அணிகள் இருந்தாலும் அதில் மிக முக்கியமான அணி தி.மு.க. இளைஞர் அணியாகும். தி.மு.க. மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தேர்வு நடந்து முடிந்த பின்பு உடனடியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நகர, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவரது வேகத்திற்கு நீங்கள் அனைவரும் ஈடு கொடுத்து செயல்பட வேண்டும். வருகிற டிசம்பர் மாதம் சேலத்தில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதுவரை தங்களுக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளை தாங்கள் திறம்பட செயல்பட்டு நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறு அவர் கூறினார்.

உறுதுணையாக இருப்பார்கள்

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:- இங்கு வந்துள்ள இளைஞரணி அமைப்பாளர்களும், துணை அமைப்பாளர்களும் சிறப்பாக செயல்பட்டு கட்சி பணியாற்றிட வேண்டும். அமைச்சர் உதயநிதி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினிற்கு பின்பு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த உள்ளார். அவர் உங்களையெல்லாம் நியமித்துள்ள போதிலும் உங்களை பற்றிய தகவல்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

நீங்கள் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இளைஞர்களை சந்தித்து பேச வேண்டும். தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு நிச்சயம் எதிர்பார்ப்பது கிடைக்கும். எனவே நீங்கள் உங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகிகள் எல்லா வகையிலும் உறுதுணையாக உங்களுக்கு இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், நகரசபை தலைவர் மாதவன், நகர செயலாளர் தனபாலன், மாவட்ட, மாநகர, இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்