தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை

வள்ளியூரில் தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

Update: 2023-01-09 19:52 GMT

வள்ளியூர் (தெற்கு):

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் 'இல்லம் தேடி' இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி வள்ளியூரில் 5-வது வார்டு நரிக்குறவர் காலனியில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில், 'இல்லம் தேடி' இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

இளைஞர் அணி அமைப்பாளர் தில்லைராஜா, ஞானதிரவியம் எம்.பி., வள்ளியூர் பேரூராட்சி துணைத்தலைவர் கண்ணன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரகுபதி என்ற இன்பா, தி.மு.க. பிரதிநிதி கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்