தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டையில் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
இட்டமொழி:
பாளையங்கோட்டை பகுதி வார்டு எண் 38 ஆரோக்கியநாதபுரத்தில் இல்லம் தேடி தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளருமான மு.அப்துல் வகாப் கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்தார். தி.மு.க. மகளிர் தொண்டரணி துணைச்செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான விஜிலா சத்யானந்த், மாநகராட்சி உறுப்பினர் வல்லநாடு முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.