வரும் 21ஆம் தேதி திமுக இளைஞரணி மாநாடு..!
தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு, வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி சார்பில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கடந்த மாதம் 17ஆம் தேதி மாநில மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் 'மிக்ஜம்' புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு கடந்த 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு, வரும் 21ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.