தி.மு.க. இளைஞரணி பாசறை கூட்டம்
குடவாசலில், தி.மு.க. இளைஞரணி பாசறை கூட்டம் நடந்தது
திருவாரூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் 52 புதுக்குடியில் நன்னிலம், குடவாசல், வலங்கைமான் ஆகிய ஒன்றிய இளைஞர் அணி தொண்டர்களுக்கான திராவிட இயக்க வரலாறு மற்றும் திராவிட மாடல் ஆட்சி குறித்த பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன், ஜோதிராமன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர் இளையராஜா வரவேற்றார். இதில், தி.மு.க. ஊடகப்பிரிவு செய்தி தொடர்பாளர் தமிழ் அமுதஅரசன், எழுத்தாளர் மதிமாறன் ஆகியோர் திராவிட இயக்க வரலாறு மற்றும் மாநில சுயாட்சி குறித்து பேசினர். கூட்டத்தில் நகர செயலாளர்கள் குடவாசல் சேரன், நன்னிலம் பக்கிரிசாமி, பேரளம் தியாகு, வலங்கைமான் சிவனேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடவாசல் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.