தி.மு.க. உட்கட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெறப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டத்தில் தி.மு.க. உட்கட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெறப்பட்டது

Update: 2022-07-05 17:24 GMT

ிருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, மாதனூர், கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 6 ஒன்றியத்தில் உள்ள 11 தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைப்பெற உள்ளது.

இத்தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்கு வாணியம்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டன. தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் க.தேவராஜ் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, திருப்பத்தூர் நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தேர்தல் நடத்தும் ஆணையர் ஜெயராஜ் இவற்ைற வழங்கினார்.

இந்தத் தேர்தலில் போட்டியிட திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள 6 ஒன்றியத்திலிருந்து ஏராளமான தி.மு.க.வினர் விருப்பமனுவை பெற்று, வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்