ராணுவ வீரர் அடித்துக் கொலை தி.மு.க. கவுன்சிலர் கைது

ராணுவ வீரர் அடித்துக் கொலை தி.மு.க. கவுன்சிலர் கைது.

Update: 2023-02-16 22:16 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது55). இவர் நாகோஜஅள்ளி பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் பிரபாகரன் (31). இருவரும், இவரது சகோதரர் பிரபு (28) என்பவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தனர். கடந்த 8-ந்தேதி அங்குள்ள பொது குடிநீர் தொட்டி அருகில் பிரபாகரன் துணி துவைத்தது குறித்து கவுன்சிலர் சின்னசாமி கேட்டுள்ளார். இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில், சின்னசாமி தரப்பினர் பிரபாகரன், அவரது தம்பி பிரபு, தந்தை மாதையன் ஆகிய 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பிரபு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கவுன்சிலர் சின்னசாமி, குருசூர்யமூர்த்தி உள்பட 9 பேரை கைது செய்தனர். குருசூர்யமூர்த்தி சென்னை மாநகரில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்