தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் மரக்கன்று நடும் விழா

கலவையில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

Update: 2023-09-23 18:21 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. முன்னதாக ஆற்காட்டில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். ஆற்காடு தொகுதி ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து 8 இடங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. கலவையில் அரசு மருத்துவமனை, பூங்கா ஆகிய இடங்களில் சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி தலைமையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, திமிரி ஒன்றிய செயலாளர் அசோக், தலைமை செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் வேதா சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சித்திக், மாவட்ட ஓட்டுனர் துணை அமைப்பாளர் டி.புதூர் சேசய்யா, திமிரி ஒன்றிய துணை செயலாளர்கள் குப்பன், அலெக்ஸ்,, மாவட்ட பிரதிநிதி மகேந்திரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் புண்ணியகோட்டி, கீதா, சோட்டே, சனாவுல்லா, பரஞ்ஜோதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கோகுல்ராஜ், மோகன், கலவைபுத்தூர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்