ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரிடம் தி.மு.க. நிர்வாகி வாக்குவாதம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரிடம் தி.மு.க. நிர்வாகி வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் வாலிகண்டபுரம் கடை வீதியில் பால் விலை, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு காரணமாக தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சாந்தப்பன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது அங்கு வந்த தி.மு.க. நிர்வாகி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து பா.ஜ.க.வினர் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகா்ா அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.