விருதுநகரில் இன்று தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் இன்று தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.;
காரியாபட்டி,
அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. உத்தரவின்பேரில் மத்திய அரசு ஆளும் மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்து விருதுநகரில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட மகளிரணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மகளிர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மற்றும் மகளிர் அணி உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.