அரியலூரில் இன்று தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்

தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் அரியலூரில் இன்று நடக்கிறது.;

Update: 2023-09-10 18:56 GMT

அரியலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரசார குழு செயலாளர் சேலம் சுஜாதா கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார். எனவே மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து அமைச்சருமான சிவசங்கர் கேட்டுக்கொன்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்