தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை - எடப்பாடி பழனிசாமி

மாற்றுத்திறனாளிகளிடம் மகாவிஷ்ணு நடந்துகொண்டது தவறானது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2024-09-06 11:12 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. நான் எங்கு செய்தியாளர்களை சந்தித்தாலும், தமிழகத்தில் நடக்கின்ற பிரச்சினைகள் குறித்துதான் கேள்வியெழுப்புகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளிடம் மகாவிஷ்ணு நடந்துகொண்டது தவறானது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணு, திமுக அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்படும்படி பேசியது கடும் கண்டனத்திற்குரியது." என்றார்.  

Tags:    

மேலும் செய்திகள்