தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசின் கடன் சுமை குறைந்துள்ளது - தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி

தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசின் கடன் சுமை குறைந்துள்ளது என்று தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி என்று விமர்சித்துள்ளார்.

Update: 2023-01-14 21:03 GMT

ஹலோ எப்.எம்.-ல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒலிபரப்பாகும் 'ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில், தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி கலந்துகொண்டு பேசினார். கவர்னரின் தமிழகம் என்ற சொல்லாடல் சர்ச்சை குறித்து பேசுகையில், வரலாற்று ரீதியாக தொல்காப்பியம் தொட்டு பாரதி வரை தமிழ்நாடு என்று குறிப்பிட்டு இருப்பதை சுட்டிக்காடிய அவர், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே கோரிக்கை வைக்கப்பட்டு வருவதாகவும், சங்கரலிங்கனார் உயிர் தியாகத்தை கடந்து போக முடியாது என்றும்,

அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் போன்றோர் தொடர்ந்து முன்னெடுத்து வந்ததையும் சுட்டிக்காட்டிய அவர், கவர்னர் வார்த்தையை எளிதில் கடந்து போக முடியாது என்றும், அவர் தொடர்ந்து அவரது அரசியல் சித்தாந்தத்தை பேசுவதற்கு அப்பதவியில் இருப்பது பொருத்தமற்றது என்றும் விமர்சித்துள்ளார்.

சட்டமன்றத்தில் தி.மு.க. ஆட்சியின் 19 மாத சாதனைகளையும், அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த தவறுகளையும் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டதாகவும் கூறிய அவர், தமிழ்நாடு அரசின் கடன் சுமையை குறைத்து உள்ளதுடன், கடன் வாங்கும் அளவையும் குறைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறி, பா.ம.க. உள்ளே வருமா? என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார். மேலும் தேநீர் விருந்து புறக்கணிப்பு? உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு, விளக்கமாக ராஜீவ்காந்தி பதில் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்