தி.மு.க.தெருமுனை பிரசார கூட்டம்

முகையூர் வடக்கு ஒன்றியத்தில் தி.மு.க.தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

Update: 2023-05-30 18:45 GMT

திருக்கோவிலூர், 

முகையூர் வடக்கு மற்றும் மணம்பூண்டி ஒன்றிய தி.மு.க.சார்பில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் கூட்டம் ஒடுங்குப்பம், சித்தாதூர், வீரபாண்டி, தேவனூர் மற்றும் அரகண்டநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவருமான வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் வக்கீல் கார்த்திகேயன், அய்யப்பன் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட துணை செயலாளரும், திருக்கோவிலூர் நகர மன்ற தலைவருமான டி.என்.முருகன், ஒன்றிய செயலாளர் கண்டாச்சிபுரம் ஜி.ரவிச்சந்திரன், அ.சா.ஏ.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் செந்தூர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பொன்.முருகன், எஸ்.கனிதராஜ், ஹரி.அய்யப்பன், மதிநிறைசெல்வன், சுலோச்சனா ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரகண்டநல்லூர் நகர இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்