தி.மு.க. எம்.பி.யின் புகைப்படங்களை கிழித்துஇந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
இந்து எழுச்சி முன்னணி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்து எழுச்சி முன்னணி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, தர்மபுரி தி.மு.க. எம்.பி. செந்தில்குமார், இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும், அவரை தகுதி நீக்கம் செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அவர்கள் அந்த புகைப்படங்களை கிழித்து வீசினர். அவர்களை போலீசார் தடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் புகைப்படங்களை கிழித்தனர். சில புகைப்படங்களை கிழிப்பதற்கு முன்பு போலீசார் பறிமுதல் செய்தனர். போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதியிடம் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.