தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளராக சுதாசிவப்பிரகாசம் நியமனம்
தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளராக சுதாசிவப்பிரகாசம் நியமனம் செய்யப்பட்டாா்
தேவகோட்டை
சிவகங்கை மாவட்ட மகளிரணி நிர்வாகிகளை தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன்டேவிட்சன் நியமனம் செய்து அறிவித்துள்ளார். அதில் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சுப.சுதாசிவப்பிரகாசம் சிவகங்கை மாவட்ட கழக மகளிர் அணி துணை அமைப்பாளராக நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
சுதாசிவப்பிரகாசம் மாவட்ட கழகச் செயலாளரும், தமிழக அமைச்சருமான கே.ஆர்.பெரிய கருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட கழக துணை செயலாளர் ஜோன்ஸ்ரூசோ, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் விசாலையன்கோட்டை கரு.அசோகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், தேவகோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நாகனி ரவி, வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பூபாலசிங்கம், தேவகோட்டை நகர தி.மு.க. செயலாளர் பாலமுருகன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.புதிய பொறுப்பு ஏற்ற சுதா சிவப்பிரகாசத்தை மகளிர் அணியினர் மற்றும் தி.மு.க. முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து வாழ்த்து கூறினர்.