தி.மு.க. தெருமுனை பிரசாரம்
கோவில்பட்டியில் தி.மு.க. தெருமுனை பிரசாரம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர தி.மு.க. செயலாளரும், நகரசபை தலைவருமான கருணாநிதி தலைமை தாங்கினார். வார்டு செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் கரூர் முரளி, நகர அவை தலைவர் முனியசாமி, பொருளாளர் ராமமூர்த்தி, துணைச் செயலாளர்கள் காளியப்பன், அன்பழகன், உலக ராணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். வார்டு செயலாளர் தங்க பாண்டியன் நன்றி கூறினார்.