அதிக உறுப்பினர்களை சேர்த்து முதலிடம் பிடிக்க வேண்டும் தி.மு.க. உறுப்பினர் படிவம் வழங்கி தேவராஜ் எம்.எல்.ஏ.பேச்சு

கந்திலி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அதிக உறுப்பினர்களை சேர்த்து மாவட்டத்தில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என க.தேவராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2023-04-05 16:37 GMT

கந்திலி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அதிக உறுப்பினர்களை சேர்த்து மாவட்டத்தில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என க.தேவராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.

செயல் வீரர்கள்கூட்டம்

கந்திலி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி கெஜல்நாயக்கன்பட்டி வள்ளி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி. அசோக்குமார் தலைமை வகித்து பேசினார்.

அப்போது கந்திலி தெற்கு ஒன்றியத்திற்கு புதிதாக 6 ஆயிரம் உறுப்பினர் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கண்டிப்பாக அதற்கு மேலும் அதிகமானவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்த்து ஜோலார்பேட்டை தொகுதியில் கந்திலி தெற்கு ஒன்றியம் முதலிடம் பிடித்கும் படி பணிகளை செய்வோம். மாவட்ட செயலாளர் கொடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்போம் என்றார்.

ஒன்றிய அவைத்தலைவர் துரைசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் க.தேவராஜ் எம்எ.ல்.ஏ., தொகுதி பொறுப்பாளரும், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணைத் தலைவருமான சா.ராஜேந்திரன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் க.தேவராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க. கோட்டையாக

அரசின் சாதனைகளை தொடர்ந்து பெண்களும், தாய்மார்களும் அதிகளவில் கழகத்தில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த ஆட்சி பெண்களுக்கான, தாய்மார்களுக்கான ஆட்சி. பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம், சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தொகை ரத்து, அண்ணா பிறந்தநாளில் இருந்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளது. 5 முறை தமிழகத்தில் முதல்- அமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கருணாநிதி பல எண்ணற்ற திட்டங்களை தீட்டி, நவீன தமிழகத்தை உருவாக்கினார்.

திருப்பத்தூர் தொகுதி இன்று வரை தி.மு.க.வின் கோட்டையாக இருப்பதற்கு காரணம் உங்களை போன்ற உழைக்கும் மக்களின் ஆதரவுதான். நமது மாவட்டத்தில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்போம். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துவோம். புதிய உறுப்பினர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்க்க வேண்டும். ஏற்கனவே சேர்த்த உறுப்பினர்களை சேர்க்கக்கூடாது. வாக்குச்சாவடி முகவர்கள் ஒரு பூத்தில் ஆயிரம் பேர் இருந்தால் 100 பேர் புதிதாக தேர்ந்தெடுத்க வேண்டும். இதில் மகளிர், மாணவர்கள், இளைஞர்கள் உள்பட யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

முதல் இடம்

வாக்குச்சாவடி முகவராக ஏற்கனவே தேர்ந்தெடுத்தவர் இருக்கக் கூடாது, கிளைச் செயலாளர்களை தேர்ந்தெடுக்க கூடாது. தமிழகம் முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதிக்குள் தொகுதியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிர்வாகியும் போட்டி போட்டுக்கொண்டு அதிக உறுப்பினர்களை சேர்த்து மாவட்டத்திலேயே திருப்பத்தூர் தொகுதி முதலிடம் பெறும் வகையில் உங்கள் பணி இருக்க வேண்டும். கந்திலி தெற்கு ஒன்றியம் சார்பில் 6 ஆயிரம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிர்வாகியும் போட்டி போட்டு அதிக உறுப்பினர்களை சேர்க்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் எம்.கே.ஆர். சூரியகுமார், மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கவிதா, நிர்வாகிகள் சம்பூர்ணம், நாகராஜ், பிரபாகரன், லட்சுமணன், ராஜா, மனோகரன், அன்பு ரோஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் நந்தினி சரவணன், பரமசிவம், சாந்தசீலன், கிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நீலா திருப்பதி, கோவிந்தராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினார்கள். 500-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் பதிவு செய்ய வந்திருந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள் உள்பட கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.வடிவேல் நன்றி கூறினார்.

கூட்டத்தில் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி முன்னாள் தமிழக முதல் -அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, அதிக உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்