இந்தி திணிப்பு குறித்து வீடு வீடாக தி.மு.க.வினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

இந்தி திணிப்பு குறித்து வீடு, வீடாக சென்று தி.மு.க.வினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Update: 2022-11-03 18:43 GMT

காரியாபட்டி,

இந்தி திணிப்பு குறித்து வீடு, வீடாக சென்று தி.மு.க.வினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

இந்தி திணிப்பு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு தனியார் மண்டபத்தில் விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளின் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

தி.மு.க. தலைமைக் கழகத்தின் சார்பில் இந்தி திணிப்பை ஏன் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கிறது. இந்திக்கு ஏன் தமிழ்நாட்டில் இடமில்லை, இந்தி திணிப்பு எந்த வகையில் தமிழ்நாட்டை பாதிக்கிறது, இந்தி திணிப்பு எந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுடைய வேலை வாய்ப்பை கெடுக்கிறது என்பதையெல்லாம் விளக்கிச் சொல்லக்கூடிய துண்டறிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதனை தாங்கள் அனைவரும் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு இந்தி திணிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல்

2024-ம் ஆண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க. கைப்பற்ற வேண்டும்.அதற்கு அனைத்து நிர்வாகிகளும் இன்று முதல் தயாராக வேண்டும் எனவும், குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதியையும் தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் கைப்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பொண்ணு தம்பி, செல்லம், கண்ணன், போஸ்தேவர், கு.கண்ணன், சந்தனப்பாண்டியன், பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர்கள் தங்க தமிழ்வாணன், கமலி பாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரன், சிவசக்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி அழகர்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

==========


Tags:    

மேலும் செய்திகள்