தி.மு.க. சார்பில் மரக்கன்று நடும் விழா

ஆற்காட்டில் தி.மு.க. சார்பில் மரக்கன்று நடும் விழாவை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.

Update: 2023-09-23 17:51 GMT

தி.மு.க. சுற்றுசூழல் அணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா ஆற்காடு வேளாண்மை விற்பணை கூட வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார். ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ஆற்காடு தொகுதிக்குட்பட்ட விளாபாக்கம், கலவை, திமிரி, புதுப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கிவைத்தார். இதில் ஆற்காடு நகர தி.மு.க. நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்