தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனையை விளக்கி மாநிலம் முழுவதும் 1,222 இடங்களில் பொதுக்கூட்டம்

தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் 1,222 இடங்களில் நடத்தப்படுகிறது. 7-ந்தேதி காஞ்சீபுரத்தில் நடக்கும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலினும் பேசுகின்றனர்.

Update: 2023-05-02 22:55 GMT

சென்னை,

தமிழ்நாடு முழுவதும்தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் 7, 8, 9 ஆகிய நாட்களில் 1,222 இடங்களில் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 7-ந்தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 7-ந்தேதி காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம், கண்டோன்மென்ட் நகர பகுதியில் நடக்கும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. இந்த நிகழ்வில் பங்கேற்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்

தூத்துக்குடியில் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியில் நடக்கும் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேசுகின்றனர்.

உத்திரமேரூர்-சுப.வீரபாண்டியன், வாலாஜாபாத்-மனுஷ்யபுத்திரன், காஞ்சீபுரம் 1-வது பகுதி-ஜி.செல்வம், காஞ்சீபுரம் 4-வது பகுதி-கவிஞர் நன்மாறன், இலத்தூர் தெற்கு ஒன்றியம்-சைதை சாதிக், சித்தாமூர்-தமிழரசன், மதுராந்தகம் வடக்கு ஒன்றியம்-வண்ணை புகாரி ஆகியோர் பேசுகின்றனர்.

குன்றத்தூர்-எழும்பூர் கோபி, கூடுவாஞ்சேரி-தமிழ்மாறன், பெருங்களத்தூர்-வள்ளிமைந்தன், திருப்போரூர்-நெல்லை என்.மணி, செம்பாக்கம்-அன்புவாணன், அம்பத்தூர்-சேப்பாக்கம் பிரபாகரன், எழும்பூர் வடக்கு-எழிலன் எம்.எல்.ஏ., கொளத்தூர்-கலாநிதி வீராசாமி எம்.பி., துறைமுகம் கிழக்கு பகுதி-நாதன், வில்லிவாக்கம்-தாயகம் கவி எம்.எல்.ஏ.

மா.சுப்பிரமணியன்

சைதாப்பேட்டை கிழக்கு பகுதி-அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆர்.கே.நகர்-அமைச்சர் சேகர்பாபு, திருநின்றவூர்-அமைச்சர் ஆவடி நாசர், தாமஸ்மலை தெற்கு ஒன்றியம்-முரசொலி மூர்த்தி, சோழிங்கநல்லூர்-சிவபிரகாசம், வேளச்சேரி-பத்மபிரியா, தியாகராயநகர்-ஆவடி பாஸ்கர், திருவொற்றியூர் -ஆர்.ஜெயசீலன், வில்லிவாக்கம் வடக்கு பகுதி-கண்ணன், மாதவரம்-அஜிம், பெரம்பூர்-தஞ்சை கூத்தரசன், பூந்தமல்லி-சாமுவேல் தங்கம்,

ஆவடி-கதிர் மீனாட்சி சுந்தரம், திருவள்ளூர் கிழக்கு ஒன்றியம்-தமிழன்பன், திருத்தணி-செங்கை தாமஸ், பூண்டி மேற்கு ஒன்றியம்-பரிதி இளம்சுருதி, திருவள்ளூர் மேற்கு ஒன்றியம்-கவிஞர் கொளஞ்சிநாதன் ஆகியோர் பேசுகின்றனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் பங்கேற்பவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 8, 9 ஆகிய தேதிகளில் நடக்கும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்பவர்களின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்