தி.மு.க. பொதுக்கூட்டம்
பாவூர்சத்திரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஜேசுராஜன், மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், துணைச்செயலாளர் கனிமொழி, பொதுக்குழு உறுப்பினர்கள் ரகீம், ரவிச்சந்திரன், சாமித்துரை, தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை வரவேற்றார்.
தலைமைக்கழக பேச்சாளர்கள் கம்பம் பாண்டித்துரை, மயிலாடுதுறை அருள்தாஸ், பேச்சாளர்கள் குத்தாலிங்கம், முத்துவேல், மரியராஜ், பேராசிரியர் சாக்ரடீஸ், மாரியப்பன், சகாயம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், ஜெயக்குமார், சிவன்பாண்டியன், செல்லத்துரை, மகேஸ்மாயவன், நகர செயலாளர்கள் சாதிர், வெங்கடேசன், அப்பாஸ், யூனியன் தலைவர்கள் காவேரிசீனித்துரை, திவ்யாமணிகண்டன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர் ஆலடி எழில்வாணன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.