கும்மிடிப்பூண்டியில் 2-வது நாளாக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டியில் 2-வது நாளாக தி.மு.க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் தமிழ்நாடு கவர்னரை கண்டித்து நேற்று 2-வது நாளாக தி.மு.க.கிழக்கு ஒன்றியம் சார்பில் அதன் ஒன்றிய செயலாளர் ந.பரிமளம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கும்மிடிப்பூண்டி தபால் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பங்கேற்றனர்.