தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
திருக்கடையூரில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது
திருக்கடையூர்:
செம்பனார்கோவில் தி.மு.க. மத்திய ஒன்றிய சார்பில் வாக்கு சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பூம்புகார் எம்.எல்.ஏ.வும் மயிலாடுதுறை தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா முன்னிலை வகித்தார். செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் வரவேற்றார். அப்போது மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள், கிளைக்கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.