தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
குத்தாலத்தில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது
குத்தாலம்:
குத்தாலம் தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பூத்கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமை தாங்கினார்.இதில் பூம்புகார் எம்.எல்.ஏ.வும் மயிலாடுதுறை தி.மு.க. மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.அப்போது மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி, மயிலாடுதுறை மத்திய ஒன்றிய செயலாளர் இமய நாதன் உள்ளிட்ட தி.மு.க. குத்தாலம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.