'பிரதமர் மோடிக்கு மட்டுமே தி.மு.க.வினர் பயப்படுகிறார்கள்' - அண்ணாமலை கடும் தாக்கு
தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை ஒழித்தால் மட்டுமே ஜனநாயகம் நிலைக்கும் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சேலம்,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சேலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
"குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம். தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை ஒழித்தால் மட்டுமே ஜனநாயகம் நிலைக்கும். பிரதமர் மோடிக்கு மட்டுமே தி.மு.க.வினர் பயப்படுகின்றனர்."
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.