தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் ஏமாற்றம்-அ.தி.மு.க. மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர் என அ.தி.மு.க. மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி குற்றச்சாட்டினார்.;
பரமக்குடி,
தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர் என அ.தி.மு.க. மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி குற்றச்சாட்டினார்.
ெபாதுக்கூட்டம்
பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் போகலூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு போகலூர் ஒன்றிய செயலாளர் ஜெ.எஸ். லோகிதாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, குப்புச்சாமி, காளிமுத்து, முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்திரன், ஒன்றிய பொருளாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய அவைத்தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் வீர கணபதி ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, விவசாய அணி துணைச்செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், தலைமை கழக பேச்சாளர்கள் மணிமுரசு, உமா சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் முத்தையா, சதன் பிரபாகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அதை தொடர்ந்து மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேசியதாவது:-
ஏமாற்றம்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. தி.மு.க கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என அனைத்தும் உயர்ந்துவிட்டது. இதற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த நிலை இப்போது தலைகீழாக உள்ளது. அ.தி.மு.க. என்பது மாபெரும் இயக்கம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க.வை வழிநடத்தி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு மக்கள் பேராதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன், மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி, மாணவர் அணி செயலாளர் வக்கீல் செந்தில் குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் தர்வேஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் நகரம் நல்லதம்பி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர்கள் மாரி, குருந்தையா, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் அனிதா முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் போகலூர் நகர் செயலாளர் கலையரசி பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.