இமானுவேல் சேகரன் சிலைக்கு தி.மு.க.வினர் மரியாதை
வாசுதேவநல்லூரில் இமானுவேல் சேகரன் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வாசுதேவநல்லூர்:
தென்காசி மாவட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வாசுதேவநல்லூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் முழு உருவ சிலைக்கு, தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மா.செல்லத்துரை தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வாசுதேவநல்லூர் பேருர் கழக செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூசை பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.