தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம்

திருப்பத்தூரில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை எ.வ.வே.கம்பன் வழங்கி தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-13 17:56 GMT

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டவுன் 4-வது வார்டில் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், தலைமை தாங்கினார். நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் இ.அய்யப்பன், திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பத்தூர் தொகுதி பார்வையாளரும், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளருமான எ.வ.வே.கம்பன், மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கி தொடங்கி வைத்தனர்.

இதில் எ.வ.வே.கம்பன் பேசுகையில், தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க. அரசு. திருப்பத்தூர் டவுன் பகுதியில் 15 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துைண செயலாளர் டி.கே.மோகன், மாவட்ட பொருளாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.வடிவேல், முன்னாள் நகராட்சி தலைவர் அரசு, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் எஸ்.பிரகாஷ், ஆர்.தேசிங்குராஜன், ஆர்.கருணாகரன், ஏ.ராஜன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் நகராட்சி கவுன்சிலர் கவுரி அய்யப்பன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்