தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம்
தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை எ.வ.வே.கம்பன் வழங்கினார்.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர், கந்திலி, ஒன்றியத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி மாடப்பள்ளி, ப.முத்தம்பட்டி, நத்தம், ஆவநாயக்கன்பட்டி, ராஜாவூர் பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கே.ஏ.குணசேகரன், ஆர்.முருகேசன், கே.எஸ்.ஏ.மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர்.
திருப்பத்தூர் தொகுதி பார்வையாளரும், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளருமான எ.வ.வே.கம்பன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கி பேசியதாவது:-
தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்தது கருணாநிதி. பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பத்தாம் வகுப்பு படித்து பிளஸ்-1 சேரும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை, ஆரம்பக் கல்வி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு, சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க. அரசு. புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கையில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் டி.கே.மோகன், ஒன்றியக் குழு தலைவர்கள் விஜியா அருணாச்சலம், திருமதி திருமுருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரங்கசாமி குமார், கோமதி கார்த்திகேயன், சுகுமார், ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ரகு, சாந்தா சண்முகம், சாந்தகுமார், துணைத் தலைவர் கோவிந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினார்கள்.