முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்..!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது.

Update: 2023-07-14 01:50 GMT

சென்னை,

தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாயலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுகவைச் சோ்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து எம்.பி.,க்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக, கவர்னர் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகள், பொது சிவில் சட்டம் உட்பட முக்கிய விஷயங்களை எழுப்புவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்