அமைச்சர் பொன்முடியை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதற்கு திமுக எம்.பி வில்சன் கண்டனம்!
சோதனை என்பது முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளை நசுக்கும் செயல் என்று திமுக எம்.பி வில்சன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இருந்து 70 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 70 லட்ச ரூபாய் பணத்துடன், அமெரிக்க டாலர் உள்பட 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதற்கு திமுக எம்.பி வில்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை சோதனை என்பது முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளை நசுக்கும் செயல் என்றும், அமலாக்கத்துறைக்கு இவ்வளவு அதிகாரம் கொடுப்பது யாருக்குமே நல்லதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.