திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் - கார் கண்ணாடி உடைப்பு

திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Update: 2023-03-15 04:07 GMT

திருச்சி,

திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் இன்று காலை சிலர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் திருச்சி சிவாவின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருச்சி சிவா வீடு அமைந்துள்ள பகுதியில் புதிய விளையாட்டு திடல் திறக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் நேரு திறந்து வைத்த நிலையில் இந்த திறப்பு விழாவுக்கான கல்வெட்டில் திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை.

இதற்கு திருச்சி சிவா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலடியாக அமைச்சர் நேரு ஆதரவாளர்களாக கூறப்படும் சிலர் திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்