தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை
பட்டுக்கோட்டையில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
பட்டுக்கோட்டை:
முன்னாள் முதல்-அமைச்சர் தி.மு.க. தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க.வில் ஒரு கோடி பேரை புதிதாக உறுப்பினராக சேர்க்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்க பட்டுக்கோட்டை ரெயிலடித்தெரு மண்டபத்தில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க.உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தலைமை தாங்கினார்.தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கா. அண்ணாதுரை எம்.எல்.ஏ., தணிக்கை குழு உறுப்பினர் பா.பாலசுப்பிரமணியன், தொகுதி பார்வையாளர் சுபசரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா, தலைமை கழக பேச்சாளர் மணிமுத்து மற்றும் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட பிரதிநிதி தனபால் நன்றி கூறினார்.இதேபோல் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை கிராமத்தில் பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் சத்ய விஜயன் தலைமையில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் அண்ணாதுரை எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஏனாதி பாலு மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.