தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாகையில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாகை நகராட்சிக்குட்பட்ட 27-வது வார்டில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமுக்கு தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான கவுதமன் தலைமை தாங்கினார். நாகை நகராட்சி தலைவரும், தி.மு.க நாகை நகர செயலாளருமான மாரிமுத்து முன்னிலை வகித்தார். முகாமில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். நாகை தொகுதி பொறுப்பாளர் ரஞ்சன்துரை, மாவட்ட பொருளாளர் லோகநாதன், அவைத்தலைவர் மீனவரணி, செயலாளர் சேகர், நகராட்சி கவுன்சிலர்கள் சித்ரா குலோத்துங்கன், திலகர், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் அபுபக்கர், குலோத்துங்கன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.