தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

Update: 2023-04-03 19:36 GMT

இட்டமொழி:

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நெல்லை கிழக்கு மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உடன்பிறப்பாய் இணைவோம் என்ற தலைப்பில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கி, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். கீழநத்தம் ஊராட்சிமன்ற தலைவி அனுராதா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாங்குநேரி மேற்கு ஒன்றியத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். வீடு வீடாக சென்று தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்த்தனர். மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை, யூனியன் துணைத்தலைவர் இசக்கிபாண்டி, ஒன்றிய பொருளாளர் சுரேஷ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மாயகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி சங்கர், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் அன்னபாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதூர்-நெடுவாழி

நாங்குநேரி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இட்டமொழி ஊராட்சி புதூர் கிராமத்தில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமை ஒன்றிய செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் நல்லாசிரியர் அகஸ்டின் கீதராஜ், பிரேமா ராஜன், ஒன்றிய துணை செயலாளர் ராதாமனோகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராதாபுரம் மேற்கு ஒன்றியத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் ராதாபுரம் ஊராட்சி நெடுவாழியில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மி.ஜோசப் பெல்சி தலைமை தாங்கினார். ராதாபுரம் தொகுதி பார்வையாளரும், மாநில வர்த்தக அணி இணை செயலாளருமான என்.தாமரை பாரதி கலந்து கொண்டு, உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ராமையா, ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் துரை, மாவட்ட பிரதிநிதி சமூகை முரளி, மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்மீனாட்சி அரவிந்தன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்