தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
நாங்குநேரியில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
இட்டமொழி:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த கூட்டத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.தங்கபாண்டியன், எஸ்.ஆரோக்கிய எட்வின், ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, வேலங்குளம் முருகன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவஅய்யப்பன், நகர செயலாளர்கள் வானமாமலை, முருகையா, நாங்குநேரி யூனியன் துணைத்தலைவர் இசக்கிப்பாண்டி, பரப்பாடி ஞானராஜ், ஒன்றிய கவுன்சிலர் அகஸ்டின் கீதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.