தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம்
முத்துகிருஷ்ணபேரியில் தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம் முத்துகிருஷ்ணபேரியில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன் வரவேற்றார். ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி சத்தியராஜ், நிர்வாகிகள் குணரத்தினம், ஆசிரியர் பழனிச்சாமி, அந்தோணிராஜ், ஆல்வின் ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.