தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பரப்பாடி இலங்குளத்தில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இட்டமொழி:
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பரப்பாடி இலங்குளத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் நல்லாசிரியர் அகஸ்டின் கீதராஜ், பிரேமா ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பூத் பாகமுகவர்கள் ஆலோசனை மற்றும் புதிய வாக்காளர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக இந்த கூட்டம் நடந்தது.