'கிணற்றில் போட்ட கல்லைப்போல தி.மு.க. ஆட்சி' முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் விமர்சனம்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்ட விழாவில் கலந்து கொண்ட, முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. ‘கிணற்றில் போட்ட கல்லைப்போல தி.மு.க. ஆட்சி’ உள்ளது என்றார் .

Update: 2023-03-15 17:36 GMT

நத்தம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நத்தத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, மணிகண்டன், சின்னு, சுப்பிரமணி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு சேரவேண்டிய பயன்கள் முழுமையாக போய் சேரவில்லை. கிணற்றில் போட்ட கல்லாக இந்த அரசு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வெள்ளிக்கொலுசு, பணம் கொடுத்து செயற்கையான வெற்றியை பெற்றுள்ளனர். போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. தி.மு.க. ஆட்சியை மக்கள் வெறுக்க தொடங்கி விட்டனர். தமிழகத்தில் மீண்டும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்கும் காலம் நெருங்கி விட்டது என்றார்.

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், ஒன்றிய குழு துணை தலைவர் முத்தையா, மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி மணிகண்டன், உலுப்பகுடி பால்பண்ணை தலைவர் சக்திவேல், நகர அவைத்தலைவர் சேக்ஒலி, பொருளாளர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வேலம்பட்டி கண்ணன், ஆண்டிச்சாமி, ஜெயப்பிரகாஷ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாய பிரிவு தலைவர் செல்லையா, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் குப்பான், நகர தலைவர் ராமமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர்கள் முருகானந்தம், சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய அவைத்தலைவர் பிறவிக்கவுண்டர் வரவேற்றார். முடிவில் பேரூர் அ.தி.மு.க. நிர்வாகி கருப்பையா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்