அதிமுக மாநாட்டை பார்த்து பொறாமை அடைந்து திமுக மாநாட்டை நடத்துகிறது - எடப்பாடி பழனிசாமி பேட்டி
அதிமுக மாநாட்டை பார்த்து பொறாமை அடைந்து திமுக மாநாட்டை நடத்துகிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம்,
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுக மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. அதிமுக மாநாட்டை பார்த்து பொறாமை அடைந்து திமுக மாநாட்டை நடத்துகிறது. காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தீர்வு காண முடியவில்லை. மேட்டூர் அணை நீர் குறைந்து வருவது குறித்து முதல்-அமைச்சர் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஊழல் அல்ல. மக்களவை தேர்தலுக்கான முதல்கட்டப்பணிகள் தொடங்கியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு அடித்தளம் கடுமையாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.