தி.மு.க. இளைஞரணி பொறுப்புகளுக்கான நேர்காணல்

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. இளைஞரணி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடந்தது.

Update: 2023-04-04 20:23 GMT

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணல் நேற்றுமாலை நடந்தது. இதில் புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணியை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இளைஞரணி பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்களை தனித்தனியாக சந்தித்து தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார்.இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்