தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்

நாமக்கல்லில் தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் ராஜேஸ்குமார் எம்.பி. தலைமையில் நடந்தது.

Update: 2023-01-10 19:30 GMT

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க.வின் சார்பு அணி நிர்வாகிகள் பதவிகளுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கான நேர்காணல் நாமக்கல்லில் தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, வர்த்தகர் அணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மற்றும் தொழிலாளர் அணிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கான நேர்காணல் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தலைமை தாங்கி நேர்காணலை நடத்தினார். மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் நலங்கிள்ளி உள்பட பலர் உடன் இருந்தனர்.

நேற்று கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்த மகளிர் அணிக்கான நேர்காணலை மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் நடத்தினார். அதேபோல் மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி முன்னிலையில் மகளிர் தொண்டர் அணிக்கான நேர்காணல் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்