மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய வழக்கில் தி.மு.க. பிரமுகர் கைது
திசையன்விளை அருகே மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய வழக்கில் தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய வழக்கில் தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
சுருக்குமடி வலை
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடித்ததாக மீன்வளத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் உத்தரவின் பேரில் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் உத்திராண்டு ராமன் மற்றும் உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அதிகாரிக்கு மிரட்டல்
அப்போது அங்கு சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் இருந்தது. அந்த மீன்களை உத்திராண்டு ராமன் பறிமுதல் செய்ய முயன்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த உவரி மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான அந்தோணிராய் என்பவர் மீன்வளத்துறை அதிகாரி உத்திராண்டு ராமனிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டி, அடிக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுெதாடர்பாக வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களிலும் பரவியது.
தி.மு.க. பிரமுகர் கைது
இதுகுறித்து உவரி போலீசில் உத்திராண்டு ராமன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அந்தோணிராயை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று உவரியில் வைத்து தி.மு.க. பிரமுகர் அந்ேதாணிராயை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.