சாத்தான்குளத்தில் தி.மு.க. வார்டு செயலாளர் தற்கொலை

சாத்தான்குளத்தில் தி.மு.க. வார்டு செயலாளர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-17 18:45 GMT

தட்டார்மடம்:

தூத்துக்குடி. மாவட்டம் சாத்தான்குளம் தச்சமொழி முதலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 48). இவர் சாத்தான்குளம் 14-வது வார்டு தி.மு.க. செயலாளராக உள்ளார். இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் தெரிகிறது. மேலும் கடந்த சில நாட்களாக மனநலம் சரியில்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு மகாராஜன் வீட்டில் இருந்த அனைத்து மாத்திரைகளையும் எடுத்து சாப்பிட்டு விட்டு மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்