கோவில்பட்டியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை

கோவில்பட்டியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நடந்தது. இதில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.

Update: 2023-04-04 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை மற்றும் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளரும், நகரசபை தலைவருமான கா. கருணாநிதி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளருமான ஜோசப் ராஜ், கோவில் பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, நகர அவை தலைவர் முனியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தனம் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், தி.மு.க.வினர் ஒரே குடும்பமாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கையில் அனைவருக்கும் வழங்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும். அடுத்த இலக்கு பாராளுமன்ற தேர்தல் தான். அதில் 100 சதவீதம் வெற்றி என்ற நோக்கத்துடன் செயல்பட வேண்டும். நாம் நமக்கு வழங்கப்பட்ட இலக்கை அடைவோம். வெற்றி பெறுவோம், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்